தோட்டப்புற மற்றும் கிராமப்புற விளையாட்டு வீர வீராங்கனைகளை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான சாதனையாளர்களாக மாற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் முயற்றசியின் ஊடாக விளையாட்டு துறை அமைச்சினால் வருடாந்தம் நடாத்தப்படும் தேசிய விளையாட்டு விழாவின் 44 ஆவது வருட விழா தற்போது பிரதேசம் , மாவட்டம் , மாகாணம் மற்றும் தேசிய மட்டம் என்ற அடிப்படையில் நடைபெற்றுக்காண்டிருகின்றது…
அனைத்து மாவட்டங்களிலும் இப்போட்டிகள் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது..
இம்முறை நுவரெலியா மாவட்டத்தின் மகளிருக்கான உதைப்பந்தாட்ட சாம்பியன்களாக டிக்கோயா போடைஸ் இளைஞர் கழக மகளிர் அணி தெரிவாகியுள்ளார்கள்.
இவ் அணியில் R.நிரோசா (அணி தலைவி ),V. சிந்துஜா , N.திஹாரிக்கா , S.வினோசா , V.அனுஷா , P. தனுஷா , T. ஜிந்துஜா , S. அசினா , V. சுசானா, S.ஹபிலாஷினி , P.பிரியங்கா, R.கிருஷாந்தினி, J.அக்ஷயா, N.சரன்யா, G.செகானியா மற்றும் T.குனேக்கா ஆகியோர் இடம்பெறுகின்றனர்..
மலையக மக்களை பிரநித்துப்படுத்தி தேசிய மட்ட போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளை படைத்துக்கொன்டிருகின்ற போடைஸ் இளைஞர் கழக மகளிர் அணி தொடர்ந்து (08) எட்டாவது வருடமாக நுவரெலியா மாவட்டத்தின் சாம்பியனாக திகழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Pushpa thiru