காஸாவில் மீண்டும் போர் நிறுத்தம்

0
175

காஸாவிலுள்ள பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கு இரண்டாவது மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் தயாராக இருப்பதாக இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் தெரிவித்தார். ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற இஸ்ரேல் பிணைக்கைதிகளை மீட்பதற்காக காஸாவில் ஏழு நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இதில் 90 இற்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறைகளில் இருந்து பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.இருப்பினும் போர் நிறுத்தத்துக்கு பிறகு இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே ஹமாஸ் அமைப்பிடம் இன்னும் 129 பிணைக்கைதிகள் உள்ள நிலையில் காஸாவில் மீண்டும் போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் நடந்து வருகிறது.

இந்நிலையிலேயே போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் தெரிவித்தார்.

மேலும் போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் இஸ்மாயில் ஹனியே நேற்று எகிப்துக்கு சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

காஸாவில் மக்கள் நிவாணர பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். உணவு, தண்ணீர், மருந்து ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here