திருகோணமலை -கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுவூற்று பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இதில் காயமடைந்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த மணல் வியாபாரிகளே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானதாக தெரிய வருகின்றது.