கிராண்பாஸில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற கார் மீது துப்பாக்கிச்சூடு

0
4

கிராண்பாஸில் நேற்று வியாழக்கிழமை (23) மாலை உத்தரவை மீறி சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

குறித்த காரை கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் சோதனை செய்ய நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் உத்தரவை மீறி சென்றதால் காரை பின்தொடர்ந்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு மோட்டார் சைக்கிளில் காரை துரத்திச் சென்று துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளது. இதன்போது, காரில் இருந்த ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.

மேற்படி சம்பவத்தின் போது சந்தேகநபர்கள் இருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனத்தை சோதனையிட்டபோது அதில் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here