கிரேன்பாஸில் பழைமையான கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 3 பேர் பலி!!

0
134

கொழும்பு – கிரேன்பாஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள பழைமையான கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இடிபாடுகளில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் , மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

இன்று மதியம் 3.15 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

தேயிலை களஞ்சிய கட்டிடமொன்றே இவ்வாறு உடைந்து வீழந்துள்ள நிலையில் , இதில் காயமடைந்த நபர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்குண்டுள்ள மேலும் சிலரை மீட்கும் பணியில் காவற்துறையினரால் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here