நத்தார் பண்டிகையைக் கொண்டாடும் உலகெங்கும் வாழுகின்ற கிறிஸ்தவ மக்களுக்கு இனிய நத்தார் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் அகமகிழ்வு அடைகின்றேன் என்று நத்தார் தினத்தை முன்னிட்டு தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :
ஆதரவு அற்றோருக்கு அடைக்கலமாய் அகிலம் முழுவதுக்கும் அன்புத் தெய்வமாய் பாரம் சுமப்போருக்கு சுமைதாங்கியாய் வந்துதித்த பாலன் யேசு பிறந்த இந்த நன்நாளில் கிறிஸ்தவ பெருமக்கள் மகிழ்ச்சிகரமாக பேருவகையுடன் உள்ளனர்.எமது நாட்டில் வாழுகின்ற கிறிஸ்தவ மக்கள் தமது சமய விழுமியங்களுடன் இனநல்லுறவுடனும் சகோதரத்துவத்துடனும் வாழுகின்றவர்கள்.ஏசுகிறிஸ்துவின் பிறப்பு முதல் உயிர்த்தெழுதல் வரையிலான வாழ்க்கைச் சம்பவங்கள் பாவமன்னிப்பையும் உலக சமாதானத்தையும் வலியுறுத்துவன. கர்த்தரின் தூதுவரின் உலக துன்பங்கள் ஒழிந்து இன்பங்கள் நிலைத்திட ஏசுபிரானை வழிபடுவோம். இனிய நத்தார் தின வாழ்த்துகள்.



