கிளப் வசந்த கொலைச் சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

0
63

கிளப் வசந்த படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட 12 சந்தேகநபர்களும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று (02) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா கடந்த 29ஆம் திகதி காலை கைது செய்யப்பட்டார்.

கொலையை செய்ய வந்த குழுவினருக்கு தங்குமிட வசதி மற்றும் ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் மேல்மாகாண தெற்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜூலை 8ஆம் திகதி அதுருகிரியில் வைத்து கிளப் வசந்த சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த காரின் சாரதி ஆகியோர் கடந்த 28ஆம் திகதி பாணந்துறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here