நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளவட்டன் பங்களா டிவிசனில் லயன் குடியிருப்பின் பின்புறத்தில் உள்ள மண்மேட்டில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளமையினால் குடியிருப்பாளர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.தொடர்ந்து பெய்து வரும் மழையினால் 08.06.2018 அதிகாலையே மண்மேட்டில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது
பாதிப்படைந்த பகுதியை பிரதேச சபை உறுப்பினர் மு.இராமச்சந்திரன் சென்று பார்வையிட்டதுடன் தோட்ட நிர்வாகத்துடன் உரையாடி நீர்வடிகானை அகளப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் பிரதேச கிராம உத்தியோகஸ்தரினூடாக அம்பகமுவ பிரதேச செயலாளரின் கவனத்திற்கும் கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்