பாடசாலையில் இருந்து பிள்ளையை விலக்கி சொந்த கிராமமான விளாச்சிய பிரதேசத்திற்கு செல்ல விரும்புவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர் தெரிவித்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக தொலைபேசி கோபுரத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்
குடும்ப தகராறு காரணமாக தனது பிள்ளையை பாடசாலையில் இருந்து இடைநிறுத்துவதற்கு தலையிடுமாறு கோரி தொலைபேசி கோபுரத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர் திரப்பனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திற்பனை பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் தனது மனைவி வீட்டை விட்டு வெளியேறியதாகவும், தன்னையும் தனது ஏழு வயது குழந்தையையும் தனியாக விட்டுச் சென்றதாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
இதனால் வேலைக்கு கூட செல்ல முடியாமல் வீட்டில் தனியாக இருப்பதாக அவர் கூறுகிறார்.
தாம் தற்போது கல்வி கற்கும் பாடசாலையில் இருந்து பிள்ளையை விலக்கி சொந்த கிராமமான விளாச்சிய பிரதேசத்திற்கு செல்ல விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உரிய திணைக்களங்கள் தலையிட்டு தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொலைபேசி கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய நபரை கீழே இறக்குவதற்கு பொலிஸார் சுமார் நான்கு மணித்தியாலங்கள் பிரயத்தனம் மேற்கொண்டனர்.
தொலைபேசி சமிக்ஞை கோபுரத்தை விட்டு இறக்கிய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.




