குடும்ப தகராறு..! மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை

0
153

அக்மீமன – மாதொல பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவியைக் கொலை செய்த கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இக்கொலைச் சம்பவம் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் கழுத்தில் தாக்கி கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.உயிரிழந்த பெண்ணின் சடலம் வீட்டின் சமையலறையிலும் கணவரின் சடலம் வீட்டின் அறையொன்றிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அக்மீமன காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அக்மீமன காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here