குடும்பத் தகராறு ; கணவரால் 40 வயது மனைவி கொலை

0
3

அரலகங்வில, தியபெதும சந்தி பகுதியில் 40 வயதுடைய பெண்ணொருவர் குடும்ப தகராறினால் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி இரவு அவரது கணவரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மெதயெல்ல வாவி பகுதியைச்  சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஆரம்ப விசாரணையில் இந்த கொலை நீண்டகால குடும்ப தகராறில் நடந்ததாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணின் கணவர் என அடையாளம் காணப்பட்ட 48 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here