நீர்நிலைகளை அசுத்தப்படுத்துவதால் நீரில் வாழும் ஜீவராசிகள் வெகுவாக உயிரிழப்பதாகவும், மீன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே, பொதுமக்கள் இதுகுறித்து அவதானம் செலுத்த வேண்டுமெனவும் சூழலியலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை ஆகிய நீர்தேக்கங்களில் பிளாஸ்திக் போத்தல்கள், யோகட் கோப்பைகள், பொலிதீன் பைகள் உள்ளிட்ட உக்காத பொருட்கள் காரணமாக நீர்தேக்கங்களில் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன.
இதேவேளை, நீர்தேக்கங்களின் நீரை தமது அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தும் மக்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும், காசல்ரீ நீர்தேக்கத்துக்கு நீர் வழங்கும் களனி ஆற்றின் கிளை ஆறான டிக்கோயா ஆற்றில், பிரதேசவாசிகள் கழிவுகளை கொட்டுவதனால் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படும் கழிவுகள் காசல்ரீ நீர்தேக்கத்தில் கலப்பதகாவும் இதனால், நீர்மாசடைவதுடன் மீன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, பொதுமக்கள் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டுமென அதிகாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
(க.கிஷாந்தன்)