குரங்கம்மை குறித்து சுகாதார அமைச்சு விசேட அறிக்கை

0
81

விமான நிலையத்தினூடாக நாட்டிற்குள் பிரவேசிக்கக் கூடிய எம்பொக்ஸ் அல்லது குரங்கம்மை நோயாளர்களை இனங்காண்பதற்காக நாடளாவிய ரீதியில் தடுப்பூசி போடும் முறை பலப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நோயாளர்கள் பதிவாகினால், அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பதற்கான வசதிகள் கொழும்பு தொற்று நோய் நிறுவகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் குரங்கம்மை நோயாளர்களை கண்டறியும் ஆய்வுகூட வசதிகள் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இந்த நோய்க்கு சிறந்த தயாரிப்பு மற்றும் பதிலளிப்பதற்கு தேவையான வழிகாட்டுதல்கள் சுகாதார நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை கடிதமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் தற்போது ஆப்பிரிக்க பிராந்திய நாடுகளில் வேகமாக பரவி 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here