குறைந்த வருமானம் ஈட்டும் மற்றும் சமூர்த்தி பயனாளிகளுக்கு புத்தாண்டுக்கு கொடுப்பனவாக 5,000 ரூபாயை கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த கொடுப்பனவுகள் அடுத்த வாரமளவில் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த கொடுப்பனவை வழங்கும்போது கொரோனா தொற்றினால் இன்னல்களை சந்தித்துள்ள குடும்பங்கள் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.