குற்றச்செயல்களை குறைப்பதற்கு அடிப்படை இடமாக இருப்பது குடும்பமும் பாடசாலையுமே; கொட்டகலையில் நிகழ்வு!

0
156

எமது பிரதேசத்திலும் சரி ஏனைய பிரதேசங்களிலும் சரி குற்றச்செயல்கள் அதிகரித்துச்செல்கின்றது. நீதிமன்றங்கள் உள்ளன பொலிஸ்துறை உள்ளது. மற்றும் ஏனைய சமூக அமைப்புக்கள் இருக்கின்றன. ஆனால் குற்றச்செயல்கள் குறைந்ததாக இல்லை.
குற்றச்செயல்களை குறைப்பதற்கு அடிப்படை இடமாக இருப்பது குடும்பமும் பாடசாலையுமே இந்த இரண்டு இடங்களிலும் சரியான முறையில் திருத்தம் செய்யப்படுபவர்கள் சமூகத்தில் உயர்நிலைக்கு வருவார்கள் குற்றச்செயல்கள் குறையும். சமூக முன்னேற்றத்துக்கு அடிப்படையாக அமைவது கல்விதான் என அக்கறைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி அ.பீட்டர்போல் தெரிவித்தார்.
இலங்கை மனித உரிமைகள் அமைப்பு நுவரெலியா கொட்டகலை கிளையின் ஏற்பாட்டில் சமூக செயற்பாட்டின் அங்கமாக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிகழ்வு கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் தேவஸ்தான கலாசார மண்டபத்தில் இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் மாகாண பணிப்பாளர் தேசமான்ய கந்தசாமி கலைச்செல்வன் தலைமையில் கொட்டகலை கிளையின் தலைவர் தேசபந்து ஆர்.கருப்பையாவின் வரவேற்புரையுடன் இடம்பெற்றது.

20170923_124849

இரத்ததானம் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் செயற்கை கால்கள் வறிய மாணவர்களுக்கான புத்தக பைகள் கற்றல் உபகரணங்கள் பார்வை குறைபாடுடையவர்களுக்கான மூக்குக்கண்ணாடி கொட்டகலை ஆதார வைத்திய சாலைக்கு நோயாளர்களை கொண்டு செல்வதற்கான தள்ளு வண்டி என்பன வழங்கப்பட்டதுடன் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கௌரவ அதிதிகளாக நுவரெலியா பிரதேச செயலக செயலாளர் எஸ்.பி.கே.போதிமன்ன இலங்கை பிரதம பொதுச்செயவாளர் தேசமான்ய சரத் ஜெயந்த பீரிஸ் சிறப்பு அதிதிகளாக அட்டன் பொலிஸ் அத்தியட்சகர் புத்தி உடுகம பீரிஸ் மனித உரிமைகள் தாபனத்தின் பணிப்பாளர் எல்.கே.கந்தலால் பிரேமச்சந்திர அரச சார்பற்ற நிறுவன நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் நிலங்க மஞ்சு சிறி கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய அதிபர் இரா.சிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

20170923_110607
இந்நிகழ்வில் அவர் மேலும் உரைநிகழ்த்துகையில்

உலகிலே வாழ்கின்ற மனிதர்களை நாம் இரண்டு விதங்களில் அடையாளப்படுத்துகின்றோம். ஒன்று சமூகத்தில் சாதனையாளராக அகிம்சை ரீதியில் வாழ்ந்தவரை உயர்த்தி பேசுகின்றோம். மகாத்மா காந்தி அன்னை திரேசா போன்றவர்களை நாம் உயர்த்தி பேசுகின்றோம். ஆனால் ஹிட்லர் முசோலினி போன்றவர்களையும் நாம் மறப்பதில்லை. ஆனால் இங்கு நாம் அவதானிக்கவேண்டிய விடயம் இவர்கள் அனைவரையும் உருவாக்கியவர்கள் ஒரு பாடசாலையின் ஆசிரியர்களே ஏன் சமூகத்தில் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. பாடசாலையில் ஒரு மாணவன் தன்னை சரியாக பக்குவப்படுத்திக்கொள்ளாத நிலையில் எதிர்காலத்தில் சிறை கூண்டுகளின் பின்னால் இருந்து கதறுகின்ற நிலையை காணக்கூடியதாக உள்ளது. எனவே சமூகத்திற்கு அடிப்படையாக இருப்பது கல்வி இதனூடகவே உயரிய நிலைக்கும் சமூகத்திற்கு தேவையான பிரஜையையும் உருவாக்க முடியும்

ஆரம்ப காலங்களில் எமது சமூகத்துக்கான கல்வி வாய்ப்புக்கள் குறைவாக இருந்தது. இன்று அந்த நிலை மாறியுள்ளது என்பதனை இந்த நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றது. எமது மலையக சமூகத்;தில் இன்று கலைப்பட்டதாரிகளே அதிகளவில் உள்ளனர். கலைத்துறையில் உள்ள ஆசிரியர்கள் அதிகளவில் உள்ளனர். ஆனால் நாம் மேம்படுத்தவேண்டிய துறைகளாக கணித விஞ்ஞான துறைகளாகவே உள்ளது. இந்த நிகழ்வில் மாணவர்களின் கற்றலுக்குரிய உதவிகள் மற்றும் சமூகத்திற்கு தேவையான விடயங்களை செய்துள்ளார்கள் தாங்களாவே முன்னேறுவதற்கு வாய்ப்புக்களை வழங்கியுள்ளார்கள். அதற்காக அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஒரு பிள்ளை சமூகத்தில உயரிய நிலைக்கு வரும் வாய்ப்பினை உருவாக்கவேண்டியவர்கள் பெற்றோர்கள். அதனையடுத்து ஆசிரியர்களும் சமூகத்தில் இருக்கின்ற ஏனைய அமைப்புக்களும். இவர்கள் தமது கடமையை சரியான முறையில் செய்யும்போது எமது சமூகம் மேலும் வளர்ச்சியடையும் என்றார்.

கொட்டகலை நிருபர் தி.தவராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here