கெஹெல்பத்தர பத்மே மற்றும் அவரது குழுவினரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளுக்கு நினைவுப் சின்னம் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இந்த நடவடிக்கையில் பங்கேற்ற இலங்கை பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும் பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பாராட்டு தெரிவித்தார்.
ஓகஸ்ட் 27 ஆம் திகதி, இலங்கையைச் சேர்ந்த ஐந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு, நேற்று (30) இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
விமான நிலையத்தில், சந்தேக நபர்களைக் கைது செய்து நாடு கடத்துவதற்கு தலைமை தாங்கிய இந்தோனேசிய அதிகாரிகளையும், பணியில் ஈடுபட்ட இலங்கை அதிகாரிகளையும், பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய ஆகியோர் வரவேற்று அங்கீகரித்தனர்.