குற்றவாளிகள் அல்லவென மொட்டு அணி வேட்பாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் ; நாமல்

0
52

கட்சி வேட்பாளர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் அல்லது போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்த பொலிஸ் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என கட்சி கோரிக்கை முன்வைக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் இளைஞர் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.

“எமது கட்சியில் அனைத்து வகையான உறுப்பினர்களும் உள்ளனர், ஆனால் தற்போது ஒரு புதிய இளைஞர் குழு எங்களைச் சுற்றி அணிதிரண்டு, ஒரு பொதுவான நோக்கம், கொள்கையையுடன் பயணிக்கிறது. இந்த இளம் உறுப்பினர்களுக்கு எங்கள் கட்சிக்குள் ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது,” என்று அவர் கூறினார்.

“மாகாண சபைத் தேர்தல்கள் விரைவில் நடைபெறும் என்று நான் நம்புகிறேன். ஒரு கட்சியாக, இந்தத் தேர்தல்களில் போட்டியிடுவது மற்றும் வேட்புமனுக்களை வழங்குவது குறித்து நாம் முடிவுகளை எடுக்க வேண்டும்.

இந்த முறை, வேட்பாளர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் அல்லது போதைப்பொருள் நடவடிக்கைகளுடன் எந்த தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்த பொலிஸ் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here