தேயிலைசெடிகளுக்கு தெழிக்கபடும் குலோப்சைட் எனும் இராசாயனத்தை சுகாதார அமைச்சின் ஊடாகவோ அல்லது தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் ஊடாகவே ஆய்வினை மேற்கொண்டு இதனை இடைநிறுத்துமாறு என்னிடம் கோறிக்கை வைத்தால் அதனை இடைநிறுத்துவதற்கான நடவடிக்கையினை பெருந்தோட்ட கைதொழில் அமைச்சர் என்ற ரீதியில் அதற்கான நடவடிக்கையினை என்னால் மேற்கொள்ளமுடியுமென பெருந்தோட்ட கைதொழில் அமைச்சர் நவீன்திஷாநாயக்க தெரிவித்தார்.
தலவாகலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் 99.9மில்லியன் ரூபாசெலவில் புதிய கட்டிடத்திற்கான அடிகல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு தேயிலை ஆராய்ச்சி நிலை உத்தியோகத்தர்களின் முன்பு உறையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
இதன் போது அமைச்சர் நவீன் திஷாநாயக்க உட்பட தலவாகலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் கவரம்மான் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் இதுவரை காலமும் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தினால் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டு மனிதனின் வாழ்க்கைக்கு குலோப்சைட் எனும் இராசாயனம் பாதிப்பை ஏற்படுத்துகிறது என ஆய்வினைமேற்கொண்டு எவ்வித அறிக்கையும் எனக்கு சமர்பிக்கபடவில்லை நான் அமைச்சர் என்ற வகையில் இருபகக்த்தினையும் சற்றும் தேடிபார்க்கவேண்டும் என்னால் ஒரு புறம் மாத்திரம் முடிவெடுக்கமுடியாது எனவும் தெரிவித்தார்.
தலவாகலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் அபிவிருத்திக்காக பெருமலவிலான நீதி பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் இன்று வழங்கபட்டுள்ளது இதேபோல் கடந்த வருடமும் 40மில்லியன் ரூபா நீதி ஒதுக்கபட்டது.
இந்த தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் தேயிலை துறையில் அபிவிருத்தி உள்ளடங்கி இருக்கிறது ஆகையால தான் இந்த தேயிலை ஆராய்ச்சி நிலையத்திற்கு நல்ல அனுபவமுல்ல சேவையாளர்களை மேலும் இனைத்து கொள்ள முயற்சிசெய்து வருகிறேன். தற்பொழுது எமது தேயிலை ஆராய்ச்சி நிலையமானது 03 பிரதான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறது இதற்கு எமது நிறுவனத்தில் குழுவாக செயற்பட்டால் இதற்கான தீர்வினை பெறமுடியும் அதில் ஒன்றுதான் சூழல் என்பதை கட்டாயம் பாதுகாக்கபட வேண்டும் காரணம் 30,40 வருடங்களுக்கு முன்பு இருந்த காலநிலை அல்ல தற்பொழுது காணபடுகிறது.
நுவரெலியாவில் தற்பொழுது அதிக வெப்பத்தை உணரகூடியதாக இருக்கிறது வெப்பமான காலநிலை அதிகமாக காணபடுமானால் தேயிலையின் தரமும் சுவையும் விழ்ச்சியடைந்து காணபடும் முன்பு தேயிலையின் மீது அதிக ஆர்வம் கொண்ட தொழிலாளர்கள் இருந்தார்கள்.
தற்பொழுது அது படிபடியாக குறைவடைந்து காணபடுகிறது தேயிலையின் தயாரிப்பு குறித்து நாம் சிந்திக்கவேண்டும் ஏனெனில் தற்பொழுது நல்ல தேயிலை தூளினை தயாரிப்பதற்கு நல்ல கொழுந்து தேவைபடுகிறது. அடுத்த 05வருடத்தில் கிலோகிராம் 400மில்லியன் தேவைபடுகிறது. ஆகையால் தான் நாம் புதிய திட்டத்தினை உருவாக்க வேண்டும். இந்த தேயிலை ஆராய்ச்சி நிலையத்திற்கு எந்த அமைச்சர் இருந்தாலும் சரி எந்த தலைவர் இருந்தாலும் சரி இதனை பாதுகாக்கவேண்டியது எமது கடமை எனவே தலவாகலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்திற்கு எமது நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் வருகை தந்து இருக்கிறார்கள் ஆகவே தான் இந்த தலவாகலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தினை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒத்துழைப்பு வழங்குவதாகவம் அமைச்சர் நவீன் திஷாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)



