குளவி கொட்டுக்கு இலக்காகி தந்தை உயிரிழப்பு: இரண்டு பிள்ளைகள் காயம் !

0
84

கொட்டுகொட , ரத்தொலுகம பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி தந்தையொருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பிள்ளைகள் காயமடைந்துள்ளதாக ரத்தொழுகம பொலிஸார் தெரிவித்தனர்.

ரத்தொலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொட்டுகொட , ரத்தொழுகம பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றிலிருந்த குளவி கூடு கலைந்ததில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து காயமடைந்த தந்தையும் இரண்டு பிள்ளைகளும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here