ஹிங்குராக்கொட ஆரம்ப பாடசாலையில் 48 மாணவர்கள் குளவி கொட்டுக்குக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.பொலன்னறுவை – ஹிங்குராக்கொட ஆரம்ப பாடசாலையில் 48 மாணவர்கள் குளவி கொட்டுக்குக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இன்று முற்பகல் பாடசாலை வளாகத்தில் இருந்த குளவி கூடு ஒன்று கலைந்ததினாலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களில் 45 பேர் பாடசாலை மாணவர்களும் ஹிங்குராக்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.