ஈரத்துடன் மின்சாதனங்களை பாவிக்கும் போது மிக அவதானமாக இருங்கள்!
புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவன் சலீம் மொஹமட் சஹ்ரான் மின்சார தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டில் குளித்து விட்டு முடி உலர்த்தி (hair dryer) மூலம் முடியை உலர வைத்த சந்தர்ப்பத்திலேயே இவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.