குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடர்: நாளை மறுநாள் தொடக்கம்!

0
96

இத்தாலியின் மிலன், கோர்டினோவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நாளை மறுநாள் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த ஒலிம்பிக் போட்டி 22,000 சதுர கி.மீ பரப்பளவில் நடக்க உள்ளது. பனிச்சறுக்கு, ஐஸ் ஆக்கி, பிகர் ஸ்கேட்டிங்,கர்லிங் உள்ளிட்ட விளையாட்டுகளை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இது ஒலிம்பிக் வரலாற்றிலேயே மிகவும் பரந்துபட்ட நிலப்பரப்பில் நடத்தப்படும் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பிப்ரவரி 22-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டிகளில், உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here