குழந்தைகளுக்கு கொடுக்க கூடாத முக்கிய உணவுகள்! சுவைக்கு பின்னால் ஆபத்து

0
188

சோடா போன்ற பானங்கள் வளரும் குழந்தைகளுக்கு ஏற்றதல்ல. வளரும் போதே ஊட்டச்சத்து பற்றாக்குறையில்லாமல் குழந்தைகள் வளர வேண்டியது மிக அவசியம்.குழந்தைகளின் தட்டில் நிரப்பும் உணவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சத்தை கொண்டிருக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

குழந்தைகளுக்கு பிடித்த ஆனால் கொடுக்கவே கூடாத உணவுகளும் உண்டு.

சிப்ஸ்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மறுக்காமல் அதிகம் சாப்பிட விரும்பும் பொருள் என்றால் அது சிப்ஸ் தான்.

பொதுவாக கடைகளில் விற்கப்படும் எல்லாவிதமான சிப்ஸ்களிலும் சோடியம், எண்ணெய்கள் அதிகம் உள்ளன.

ஆகவே இதை குழந்தைகளுக்கு கொடுக்காமல் வீட்டில் குறைந்தளவில் உப்பு சேர்த்து தயாரிக்கும் சிப்ஸ்களை கொடுக்கலாம்.

பீட்சா

நாள் ஒன்றுக்கு தேவையான உப்பின் அளவில் 25% பீட்சாவில் கிடைத்துவிடுகிறது. வீட்டில் தயாரிக்கப்படுவதை காட்டிலும் வெளி இடங்களில் வாங்கி சாப்பிடும் போது இந்த அளவு இன்னும் அதிகரிக்க செய்கிறது. டாப்பிங் செய்யப்படாத பீட்சாவின் நான்கு துண்டுகளில் 370 முதல் 730 கிராம் வரை சோடியம் உள்ளது.

மிட்டாய்கள், சாக்லேட்கள்

இளம் வயதிலேயே அதிக இனிப்பு உணவுகளை குழந்தைக்கு கொடுப்பது அவர்கள் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடும். இனிப்பு உணவுக்கு குழந்தை பழகி விட்டால், மற்ற உணவுகளை சாப்பிடுவதில் ஆர்வம் காட்டாது. இதனால் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் போகும்.

சோடா

சோடா போன்ற பானங்கள் வளரும் குழந்தைகளுக்கு ஏற்றதல்ல, இதில் சர்க்கரை அதிகமாக உள்ளது. மேலும் இது சோடாவில் ஊட்டச்சத்துக்கள் என எதுவும் இல்லை.

மைக்ரோவேவ் பாப் கார்ன்

உங்கள் குழந்தைகள் பாப்கார்னை ரசித்து சாப்பிடக்கூடும், இது தீங்கு விளைவிக்காதது, ஆனால் மைக்ரோவேவ் பாப்கார்ன்கன் அப்படியில்லை.

இதில் பெர்ஃப்ளூரோக்டானோயிக் அமிலம் அல்லது PFOA என்று அழைக்கப்படும் இரசாயனம் உள்ளது, இது பூப்படைதலை தாமதமாக்கும், குழந்தைகளுக்கு அதிக கொழுப்பை உண்டாக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here