நாடலாவிய ரீதியில் அதிகரித்து வரும் வெப்பநிலையை அடுத்து, நீரிழப்பு ஏற்படாமல் இருக்க, தங்கள் குழந்தைகளை தினமும் குறைந்தது இருபது நிமிடங்களாவது குளிக்க வைக்குமாறு பெற்றோர்களுக்கு மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து குழந்தை மருத்துவ நிபுணர் வைத்தியர்.தீபால் பெரேரா தெரிவிக்கையில்,
குழந்தைகளிடையே தோல் வியாதிகள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி நாடு முழுவதும் அதிகரித்து வரும் வெப்ப அளவுகளே இதற்குக் காரணம் என்று எடுத்துரைத்தார்.
வெப்பநிலை அதிகரிப்பது தோல் நிலைமைகளை மோசமாக்குவது மட்டுமல்லாமல், குறிப்பாக குழந்தைகளிடையே நீரிழப்புக்கான குறிப்பிடத்தக்க அபாயத்தையும் ஏற்படுத்துகிறது என்று வலியுறுத்தினார்.
போதுமான நீரேற்றம் மற்றும் குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு குளித்தல், எளிய ஆடைகளை அணிதல் மற்றும் இயற்கை பானங்களை ஊக்குவித்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், குழந்தைகளை வெப்பநிலையில் இருந்து பாதுகாக்க உதவும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.