2002-ல் முதல் படத்திலேயே சிறந்த பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றவர் ஷ்ரேயா கோஷல். இதுவரை நான்கு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
பிப்ரவரி 5, 2015-ல் தொழிலதிபர் ஷிலாதித்யாவைக் காதல் திருமணம் செய்தார் ஷ்ரேயா கோஷல். இருவரும் 10 வருடங்கள் காதலித்து திருமணம் செய்தார்கள்.
கடந்த மே 22 அன்று ஷ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தேவ்யான் எனக் குழந்தைக்குப் பெயரிட்டுள்ளார்கள்.
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு, தேவ்யானை அறிமுகப்படுத்துகிறோம் என எழுதியுள்ளார் ஷ்ரேயா கோஷல்.