கெடுதல் பண்ணாமல் இருந்தாலே போதும் – நடிகர் கவின்!

0
2
dailythanthi

நம்மளால் முடிந்த அளவுக்கு இந்த சமூகத்துக்கு எதுவும் கெடுதல் பண்ணாமல் இருந்தாலே போதும் என்றுதான் பார்க்கிறேன் என நடிகர் கவின் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

சின்னத்திரை டூ வெள்ளத்திரை

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகர் கவின். இவர் விஜய் டி.வியில் புகழ்பெற்ற ‘கனா காணும் காலங்கள்’ தொடர் மூலம் சின்னத்திரை பயணத்தை தொடங்கினார். பின் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் வேட்டையனாக வந்து மக்கள் அனைவரையும் கவர்ந்தார்.

பின்னர், கவின் ‘நட்புனா என்ன தெரியுமா’ படத்தில் கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகினார். இதனை தொடர்ந்து ‘லிப்ட்’, ‘ஸ்டார்’, ‘கிஸ்’, ‘டாடா’, ‘ப்ளடி பக்கர்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார்.

நயன்தாராவுடன் ஜோடி

தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து ‘ஹாய்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எடவன் இயக்கியுள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் மறைந்த நடிகர் பாக்யராஜ், நடிகர்கள் பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ் போன்றவர்கள் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 28ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சி மற்றும் பேட்டிகளில் நயன்தாரா மற்றும் கவின் கலந்து கொண்டு வருகின்றனர்.

“கெடுதல் பண்ணாமல் இருந்தாலே போதும்”

இந்த நிலையில், நடிகர் கவின் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் இந்த சமூகத்துக்கு எதுவும் கெடுதல் பண்ணாமல் இருந்தாலே போதும் என்று பேசியுள்ளார். அதாவது, “ரோல் மாடல் ஆவேன் என்று நினைத்து எதையும் செய்ய முடியாது. நாம் நாமாக இருந்து, அதில் பிடித்ததை மக்கள் எடுத்துக் கொண்டால் சந்தோஷம். நம்மளால் முடிந்த அளவுக்கு இந்த சமூகத்துக்கு எதுவும் கெடுதல் பண்ணாமல் இருந்தாலே போதும் என்றுதான் பார்க்கிறேன். இப்போது படத்தில் ஸ்மோக்கிங் சீனோ, குடிப்பது போன்ற காட்சியோ வந்தால், அது அந்தக் கதைக்கும், காட்சிக்கும் மிகவும் தேவைப்பட்டால் மட்டும்தான் செய்கிறேன்.

ரியல் லைபில் நான் ஸ்மோக், டிரிங்க்ஸ் பண்ண மாட்டேன். முடிந்த அளவுக்கு அதை எப்படி ஆன்-ஸ்கிரீனில் தவிர்க்கலாம் என்று ட்ரை பண்றேன். ஆனால், அதுவே ‘நோ’ என்று சொல்வதற்கு எனக்கு நான்கைந்து படங்கள் தேவைப்பட்டுவிட்டது” என்று பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here