கெட்டபுலா தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி

0
284

கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட நாவலப்பிட்டி கெட்டபுலா தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நேற்று (26.03.2023) பாடசாலை மைதானத்தில் அதிபரின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கொத்மலை வலய கல்விப்பனிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் அதிபர்கள், மற்றும் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதேச அமைப்பாளர்களான திரு.பத்மராஜ், திரு.சித்தலிங்கம், திரு.திருக்கேதீஷ்வரன் என பலரும் கலந்துகொண்டனர்.

ஜூபிடஸ், வீனஸ், மாஸ் என மூன்று இல்லங்கள் கொண்ட இந்த போட்டியின் இறுதியில் ஜூபிடஸ் இல்லம் வெற்றியை பெற்றது.

 

(அந்துவன்)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here