கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற “பசும்பால் நுகர்வை பிரபல்யப்படுத்தும் பால் நிறைந்த தேசம்” எனும் தொனிப்பொருளில் பாடசாலை மாணவர் மத்தியில் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட கட்டுரை போட்டியில் கொ/புனித அந்தோனியார் மகளிர் மகா வித்தியாலய மாணவி பேரின்பராஜா கவ்யாஷா அகில இலங்கை மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு கடந்த 15ம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில்
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களிடமிருந்து பரிசினையும் சான்றிதழையும் பெற்றுக்கொண்டார்.
பா.திருஞானம்