கேரளாவில் மதம் மாற வலியுறுத்தியதால் இளம்பெண் மர்மச்சாவு குறித்து விசாரணை

0
9

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவி (23) கடந்த சனிக்கிழமை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து வீட்டுவேலை செய்யும் அந்த பெண்ணின் தாயார் கூறும்போது, “மகளைக் காதலித்து வந்த இளைஞரும், அவரது குடும்பத்தாரும் எனது மகளை முஸ்லிம் மதம் மாறுமாறு கட்டாயப்படுத்தினர். மேலும் அந்த இளைஞர் எனது மகளை மதம் மாறுமாறு கட்டாயப்படுத்தி அடித்து உதைத்துள்ளார். மன உளைச்சல் ஏற்பட்டு எனது மகள் இறந்துவிட்டாள்’’ என்று தெரிவித்தார்.

மதம் மாறுமாறு தொந்தரவு செய்ததால் மன உளைச்சல் ஏற்பட்டதாக அந்த பெண் எழுதிய கடிதமும் போலீஸாரிடம் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here