கொட்டகலை கே.ஓ.பிரிவு (பெரிய மண்வெட்டி தோட்டம்) சித்தி விநாயகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார உற்சவத்தினையொட்டி தேர் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.
நேற்று காலை 8.00 மணிக்கு ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு விசேட திரவிய அபிசேகம், நடைபெற்றதனை தொடர்ந்து வசந்தமண்டப தீபாராதனை, அஸ்டோத்ர சத அர்ச்சனை புஸ்பாஞ்சலி தேவ ஸ்தோத்திர திருமுறை பாராயணம் நாத கீத கீதாஞ்சலி, தேவர்கள் பூமாரி சொரிய அடியவர்களின் அரோகரா கோசத்துடன் ஸ்ரீ சித்திவிநாயகர்,ஸ்ரீ முத்துமாரியம்மன் வள்ளி தெய்வானை சமேத முருகன் அலங்கரிக்கப்பட்ட முத்தேரில் அடியவர்களுக்கு அருள்பாலிப்பதற்காக கரகம், காவடி, மேளதாள பாரம்பரிய இசை முழங்க வெளி வீதி உலா இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து அடியார்களின் பூஜைகள் நடைபெற்று பச்சை சாத்தப்பட்டு, திருவூஞ்சல் இடம் பெற்றன. நாளை கரகம் குடிவிடுதலும் தீர்த்த உற்சவமும் இடம்பெற்று திருவிழா இனிதே நிறைவு பெறும்.
மலைவாஞ்ஞன்