கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று (02) திகதி வெளியான பி.சி.ஆர்.அறிக்கையின் படி 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது வைத்திய சுகாதார பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் எதிர்வரும் நாட்களில் உரிய சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் இந்த தொற்றாளர்களுடன் நெருக்கமான உறவை பேணிய நபர்கள் தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று வெளியான அறிக்கையின் படி தலவாக்கலை நகரசபைக்குட்பட்ட பகுதியில் ஏழு பேருக்கும், மௌன்ட்வேணன் 01, எரின்டன்கொலனி 01, தர்மபுரம் 01, போகாவத்தை 01 தெவிசிறிபுர 01, ரொசிட்டா தோட்டம் 01, லொப்கில் 01, கொத்தமல்லி தோட்டம் 02 பேருமாக மொத்தம் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதே வேளை தலவாக்கலை நகரசபையின் தலைவர் லெச்சுமன் பாரதிதாசன் அவர்களுக்கு பி.சி,ஆர் எடுக்கப்பட்ட போதிலும் அவருக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கே.சுந்தரலிங்கம்