கொரோனா தொற்று பரவல் தடுப்பதற்காக தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நாடாளவிய ரீதியில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பொது சுகாதார பிரிவுகளிலும் குறித்த வேலைத்திட்டம் கடந்த காலங்களில் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன.
இந் நிலையில் கொட்டகலை சுகாதார பிரிவில் நாளை (26) திங்கட்கிழமை 30 வயத்திற்கு மேற்பட்ட சுமார் கொட்டகலை கிராம சேவகர் பிரிவில் 3500 பேருக்கு தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கே.சுதர்சன் தெரிவித்தார்.
கொட்டகலை வர்த்தகம் சங்கம் ஒழுங்கு செய்திருந்த கொரானா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக கொட்டகலை பொது சுகாதார பிரிவு முன்னெடுக்கும் சேவை பாராட்டு விழாவும் கொட்டகலை பொது சுகாதார அதிகாரி அலுவலக்திற்கு மருத்துவ உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வும் கொட்டகலை வர்த்தக சங்கத் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தலைமையில் நேற்று (24) மாலை கொட்டகலை முத்துவிநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் கொரோனா தடுப்பூசிகள் களஞசியப்படுத்தி வைப்பதற்காக குளிர்சாதனப்பெட்டி மற்றும் ரிஜிபோம் பெட்டிகள்,உட்பட மருத்துவ உபகரணங்கள் வர்த்தக சங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன் அவர்கள் கொரானா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக கிராம சேவகர்கள்,பொது சுகாதார பரிசோதகர்கள்,பொது சுகாதார வைத்திய அதிகாரி கே.சுதர்சன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தப்பட்டன.
கடந்த காலங்களில் கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 கிராம சேவகர்பிரிவுகளில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சைனோபாரம் முதலாம் இரண்டாம் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது இதில் சுமார் 85 சதவீதமானவர்கள் தற்போது இந்த சுகாதார பிரிவில் தாடுப்பூசிகள் இரண்டும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஏனையவர்களுக்கு புதன் வெள்ளி சனி ஆகிய தினங்களில் கொட்டகலை வைத்தியசாலையில் தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் நாங்கள் 3000 இற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றால் தடுப்பூசிகளை பெறுவதற்கு மூன்று முறையாவுது நுவரெலியா செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது இதனை தவிர்த்து இந்த வேலைத்திட்டத்தினை துரிதப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த தடுப்பூசிகளை பாதுகாப்பதற்கு ஏற்ற உபகரணங்கள் எமக்கு தேவைப்பட்டன இந்நிலையில் நாங்கள் கொரோனா தொற்று பரவல் காரணமாக வர்த்தகர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் எவ்வாறு இவர்களிடம் உதவி கேட்பது என்று யோசித்துக்கொண்டு தான் நாங்கள் இந்த வர்த்தக சங்கத்தினை நாடினோம் ஆனால் அவர்கள் எவ்வித தயக்கமும் இன்றி எங்களுக்கு தேவையான உபகரணங்களை பெற்றுக்கொடுப்பது மாத்திரமல்லாது தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்திற்கும் தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்துள்ளார்கள் ஆகவே இதனை மிக வேகமாக முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளதுடன் அதற்காக வர்த்தக சங்கத்திற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் இதன் போது தெரிவித்தார்.
சுகாதார பொறிமுறைகளுக்கு அமைய நடைபெற்ற குறித்த நிகழ்வுக்கு வர்த்தக சங்க தலைவர் புஸ்பா விஸ்வநாதன் செயலாளர் மதி,பொருளாளர் நகர வர்த்தகர்கள் சர்வமத தலைவர்கள் பொது சுகாதார பரிசோதகர் சௌந்தர் ராகவன் கிராம சேவகர், உட்பட கல்வி மான்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கே.சுந்தரலிங்கம்