கொரோனா தொற்று பரவல் தடுப்பதற்காக தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நாடாளவிய ரீதியில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பொது சுகாதார பிரிவுகளிலும் குறித்த வேலைத்திட்டம் கடந்த காலங்களில் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன.
இந் நிலையில் கொட்டகலை சுகாதார பிரிவில் திங்கட்கிழமை 30 வயத்திற்கு மேற்பட்ட சுமார் கொட்டகலை கிராம சேவகர் பிரிவில் உள்ள 3500 பேருக்கு இன்று (26) திகதி கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கே.சுதர்சன் தெரிவித்தார்.
இதற்கமைய கொட்டகலை நகர்பகுதியில் கடை உரிமையாளர்கள்,கடைகளில் பணி புரிவோர் உட்பட மக்களுடன் தொடர்புடைய 30 வயத்திற்கும் மேற்பட்டவர்களுக்கும் ஏனையவர்களுக்கும் இன்று தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
குறித்த தடுப்பூசி வழங்கும் செயப்பாட்டுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள்,தாதியர்கள்,குடும்பநல உத்தியோகஸ்த்தர்கள்,பாதுகாப்பு பிரிவினர்,கொட்டகலை வர்த்தக சங்கம் உள்ளிட்டவர்கள் ஒத்துழைப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கே.சுந்தரலிங்கம்