வைத்தியரை அச்சுருத்தியமை தொடர்பில் முன்னால் பிரதேச்சபை உறுப்பினர் உட்பட இருவருக்கு எதிர் வரும் 29ம் திகதி வரை விளக்கமறியல்.
கொட்டகலை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரை அச்சுருத்தியமை தொடர்பில் 19.03.2018. செவ்வாய் கிழமை திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகிய இ.தொ.கா.உறுப்பினரும் முன்னால் பிரதேச்சபை உறுப்பினர் மலர்வாசகம் மற்றும் கைது செய்யபட்டு இ.தொ.கா. ஆதரவாளர் சந்திரபோஸ் ஆகிய இருவரும் எதிர் வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அட்டன் நீதவான் டி.சரவனராஜா உத்தரவிட்டுள்ளார் .
19.03.2018. செவ்வாய் கிழமை இரண்டு சந்தேக நபர்களையும் அட்டன் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கபட்டது
கடந்த வெள்ளிகிழமை இரவு கொட்டகலையில் இருந்து திம்புள்ள பகுதியை நோக்கி பயணித்த வேன் ஒன்றில் மோதுண்ட ஒருவருக்கு கொட்டகலை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரால் முறையாக சிகிச்சை வழங்கபடவில்லையென தெரிவித்து இ.தொ.கா. ஆதரவாளர்கள் சிலர் வைத்தியசாலையை முற்றுகையிட்டு வைத்தியர் ஒருவரை அச்சுருத்தியதாக கூறி திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்று பதிவுசெய்யபட்டிருந்தது.
இதனை தொடர்ந்து வெள்ளிகிழமையும் சனிக்கிழமை உறியவர்களை கைது செய்யுமாறு கோறி வைத்தியர்கள் உட்பட ஏனய உத்தியோகத்தர்களும் பனிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர் .
இதனால் கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள் பெறும் அவதியுற்றமையும் குறிப்பிடதக்கது.
இதனை தொடர்ந்து இன்றைய தினம் உரிய இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியமை அடுத்து மற்றுமொறு சந்தேக நபர் கைது செய்யபட்டமையடுத்து கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் மேற்கொள்ளபட்ட பணிபகிஷ்கரிப்பு கைவிடபட்டமை குறிப்பிடதக்கது.
எஸ்.சதீஸ் ,க.கிஷாந்தன்