கொட்டகலை வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கு இடையூறு விளைவித்தவர் என கூறப்பட்டுவந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியதையடுத்து கொட்டகலை வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுவந்த பணிபகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.
கடந்த 17 ம் திகதி இரவு கொட்டகலை வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கும் ஊழியர்களுக்கும் இ.தொ.கா ஆதரவாளர்களினால் இடையூறு விளைவித்ததாக கூறி வைத்தியசாலை அதிகாரிகளினால் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி பனிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந் நிலையில் சந்தேக நபரான மலர்வாசகம் என்பவர் 19.03.2018 காலை திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ள நிலையில் கொட்டகலை வைத்திசாலையின் வைத்தியர்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த பனிபகிஷ்கரிப்பும் காலைமுதல் கைவிடப்பட்டுள்ளது.
மு.இராமச்சந்திரன்