கொட்டகலையில் ஆன்மீக எழுச்சி பேரணி மிக சிறப்பக நடைபெற்றது

0
137

இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் 18 வருட பூர்த்தியினைன முன்னிட்டு அறநெறி எழுச்சி விழாவும் மலையகம் 200 மாபெரும் விருது வழங்கும் விழா நேற்று 22 ம் திகதி கொட்டகலை ரிசிகசி கலாசர மண்டபத்தில் 8.30 மணியளவில் ஒன்றியத்தின் ஸ்தாபகரும் பொதுச்செயலாளருமான சிவஸ்ரீP சுரேஸ்வர சர்மா தலைமையில் ஆரம்மாகியது
இந்த நிகழ்வினை முன்னிட்டு கொட்;டகலை புகையிரத கடவைக்கு அருகாமையில் அறநெறி மாணவர்கள் மற்றும் சமய தலைவர்கள் அரசியல் சமூக பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட ஊர்வலம் மிக சிறப்பாக நடைபெற்றது.
அதில் அறநெறி மாணவர்களின் பாரம்பரிய இசையான தப்பு கோலாட்டம்,கரகாட்டம்,காவடி உள்ளிடட பல கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.

பாரத தேசத்தின் தமிழ் நாடு திருகைலாய ஸ்ரீ கந்தப் பரம்பரை சூரியனார் கோயில் ஆதீனம் ஸ்ரீ கார்யம் சிவநெறி பிரச்சாரகர் திருமறைக் கலாநிதி ஸ்ரீலஸ்ரீ சிவகர தேசிக சுவாமிகள் ஆசி உரையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு புத்தசாசன் சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கனடா வோல்ட் எக்ஸன் பவுன்டேசன் ஸ்தாபகர் சுபாஸ் சுந்தரராஜ் மத குரமார்கள்,மற்றும் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here