ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கோரி கொட்டகலையில் கவனயிர்ப்பு ஆர்பாட்டமொன்று இடம்பெற்றது
பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா அடிப்படை சம்பளம் கோரி தொடர் வேலைநிறுத்தப்போராட்டம் நான்காவது நாளாகவும் 07.12.2017 தொடர்கின்றது
இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் முன்னெடுக்கப்படும் தொடர் வேலை நிறுத்தப்போராட்டம் தொடர்கின்ற அந்த வகையில் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டோனிகிளிப் தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்திலும் இன்று ஈடுட்டனர் தொழிலாளர் சம்பளவுயர்வு கோரிய போராட்டம் தொடர்பில் உலகமே தனது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் எம் உழைப்பினை பெற்றுக்கொள்ளுபவர்கள் ஏன் கண்டுக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம் கிருஸ்ணா