கொட்டகலையில் மண் வெட்டியால் தாக்கியதில் ஒருவர் பலி!!

0
213

கொட்டகலை யதன்சைட் தோட்ட பகுதியில் மண் வெட்டியால் தாக்கியதில் ஒருவர் பலி. சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் ஆஜர்திம்புள்ள பத்தனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கொட்டகலை யதன்சைட் தோட்டபகுதியில் ஒருவர் மண் வெட்டியால் தாக்கி கொலைசெய்யபட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர் .

இந்த சம்பவம் 01.04.2018. ஞாயிற்றுகிழமை இரவு 09.30மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தாக்கபட்ட நபருடைய மனைவிக்கும் சம்பவத்தில் பலியான நபருக்குமிடையில் தகாத உறவுமுறை ஒன்று இருப்பதை அறிந்து கொண்ட நபர் இவர்கள் இருவரும் மரக்கரி தோட்டம் ஒன்றில் கதைத்து கொண்டிருந்ததை கண்ட மனைவியின் கணவர் இரண்டு பேரையும் மண் வெட்டியால்   தாக்கியபோது போது சம்பவ இடத்தில் கள்ளகாதலன் பலியானதோடு காயமடைந்த மனைவி காயங்களுடன் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்டவிசாரனைகளில் இருந்து தெரியவந்தள்ளது.

சம்பவத்தில் பலியான நபர் கொழும்பு பகுதியில் தொழில் புரிந்து வருவதாகவும் தனது மனைவிக்கு தெரியாமல் குறித்த பெண்னை சந்திக்கவந்துள்ளதாகவும் பலியானவர் 50வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான எஸ்.ரகு என்பவரே இவ்வாறு   பலியானதாகவும்  பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

DSC01308 DSC01306 DSC01301 DSC01292 DSC01283 DSC01276 DSC01265

தாக்குதல் மேற்கொண்ட நபர்    நபர் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாகவும் இவர்களுக்கிடையில் உள்ள கள்ளகாதல் தொடர்பு  பற்றி   குறித்த நபருக்கு கணவரால் அறிவிக்கபட்டபோதும் தொடர்ந்தும் இவர்களுக்கிடையில் உறவு முறை தொடர்ந்தாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நீதவானின் மரண விசாரனைகளின் பின்னர் சடலம் நுவரெலியா மாவட்டவைத்தியசாலைக்கு சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக அனுப்பிவைக்கபட உள்ளதாகவும் சந்தேக நபர் 02.04.2018.திங்கள் கிழமை அட்டன் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபட உள்ளதாகவும் திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர் .

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர் .எஸ்சதீஸ் )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here