திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டகலை நகரில் இன்று(25)இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மதியம் 12.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக திம்புல்ல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியாவில் இருந்து வந்த கெப்ரக வாகனமும் கொட்டகலை எதன்வைட் தோட்டத்திலிருந்து வந்த முச்சக்கர வண்டியும் கொட்டகலை நகரில் ஒன்றுக்கொன்று மோதியதில் முச்சக்கர வண்டியில் வந்த சாரதியும் அதில் பயணித்த ஒருவருமே சிறு காயங்களுக்குள்ளாகி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இவ்விபத்து சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை திம்புல்ல பத்தனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பா.பாலேந்திரன்