கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் தரம் 01 மாணவர்களை உள்வாங்கும் விழா அதிபர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது..
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கொட்டகலை பிரதேச சபையின் கௌரவ தலைவர் ராஜமணி பிரசாந்த் அவர்கள்_
இன்றைய தினம் பாடசாலை கல்வியை தொடரும் மாணவர்கள் கல்வியை முறையாக கற்று நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் சிறந்த பிரஜையாக திகழ்வதோடு எதிர்காலத்தில் சிறந்த தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும்,, மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் ஆசிரியர்கள் மாத்திரம் இன்றி பெற்றோர்கள் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்,,
இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர்,, ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க அங்கத்தவர்கள், பழைய மாணவர் சங்க அங்கத்தவர்கள் கொட்டகலை பிரதேச சபையின் கௌரவ உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
தகவல்: நீலமேகம் பிரசாந்த்