நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக பல மாவட்டங்களுக்கு கணத்த மழை பெய்து வருகிறது இந்நிலையில் நுவரெலியா மாவட்த்தில் கொட்டும் மழையிலும் தீபத்திருநாளினை கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர் மலையக மக்கள்.
கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது இன்று காலை முதல் மாலை வரை மழையற்ற காலநிலை காணப்பட்டதனால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தீபத்திருநாளினை கொண்டாடுவதற்கு தேவையான அத்தியவசிய பொருட்களையும் ஆடைகளை கொள்வனவு செய்வதற்காக ஹட்டன் நகரில் கூடியிருந்தனர்.
இதனால் பல இடங்களில் சன நெரிசல் காணப்பட்டன.தீபத்திருநாளினை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
தலைநகர் மற்றும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பணிபுரியம் நபர்கள் தங்களுடைய சொந்த வீடுகளுக்கு செல்வதற்காக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
கடந்த சில தினங்களாக சோகையிழந்து காணப்பட்ட தீபாவளி வரத்தகம் இன்று காலை முதல் சூடு பிடித்திருந்தன.
பொருட்களின் விலைகள் ஏனைய தீபாவளி காலங்களை விட அதிகமாக காணப்படுவதனால் இம்முறை தீபாவளிக்கு கடந்த காலங்களை விட மிக குறைவாகவே நடைபாதை வர்த்தக கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மக்களும் ஏனைய காலங்களை விட மிக குறைவாகவே பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு நகரத்திற்கு வருகை தந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
பொது மக்களின் பாதுகாப்பு கருதி ஹட்டன் நகரில் பல இடங்களில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்