ராகலை கொணிகர் பிள்ளையார் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 04ல் கல்விகற்கும் 09 வயது மாணவி திடீரென நீரோடையில் அதிகரித்த வெள்ளதால் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.குறித்த மாணவி பாடசாலை முடிந்து நண்பிகளோடு வீட்டுக்கு திரும்பும் வழமையான பாதையில் செல்லும் வழியிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக ஆசிரியர் ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது ” நேற்று காலை காலநிலை நன்றாகவே இருந்தது ,எனினும் எப்படி திடீரென இப்படி வெள்ளம் வந்தது என யூகிக்க முடியவில்லை, இந்த ஓடையில் எப்போதுமே இதற்கு முன்பு இப்படி வெள்ளம் வந்தது இல்லை” என தெரிவித்தார் .
கிட்டத்தட்ட 100 அடி தூரம் வரை நீரில் அடித்து செல்லப்பட்ட மாணவியை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும் வழியில் உயிரிழந்தார் என கவலையுடன் அவர் தெரிவித்தார்.