கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் களிதாஸ் பதவி விலகினார்.

0
136

தொழிலாளர் தேசிய சங்கம், முன்னணியில் இருந்து கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் களிதாஸ் விலகியதாக அறிவித்துள்ளார்.

கொத்மலை பிரதேச சபையின் உறுப்பினராக கடந்த பத்து ஆண்டுகாலமாக இரண்டு தடவைகள் தொழிலாளர் தேசிய சங்கத்தினை பிரதிநிதித்துவம் செய்த காளிதாஸ் சங்கத்தினதும் முன்னணியினதும் சகல பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். இந்த தகவலை சங்கத்தினதும் கட்சியினதும் உயர் பீடத்துக்கு அறிவித்துள்ள அதே நேரம் எதிர்வரும் காலங்களில் சுயாதீனமான தீர்மானங்களை எடுத்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளியான காளிதாஸ் தோட்டக் கமிட்டி தலைவர், மாவட்டத்தலைவர் முதலான பதவிகளை தொழிலாளர் தேசிய சங்கத்தில் வகித்ததுடன் நாவலப்பிட்டி காரியாலயத்தில் இணைப்பாளராகவும் தொழிலாளர் தேசிய முன்னணி குயின்ஸ்பெரி பகுதி அமைப்பாளராகவும் செயற்பட்டு வட்டாரத்தின் பிரதேச சபை உறுப்பினராகவும் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.இவ் அனைத்து பதவிகளில் இருந்தும் விலகி கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here