கொத்மலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வை புறக்கணித்த சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர், எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து, கண்டன போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இதன் போது, ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கொத்மலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, இன்று (30) காலை இடம்பெற்ற நிலையில், அமர்வுக்கு வருகை தந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சபை அமர்வை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும், உரத்தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள விவசாய பின்னடைவு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், வாழ்க்கைப்புள்ளி உயர்வு மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி அரசு மக்களை நசுக்குவதாகவும் இந்த அசௌபாக்கிய அரசாங்கம் வேண்டாம் எனவும், போராட்டக்காரர்களால் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களை முழுமையாக ஏமாற்றி, அவர்களின் வருமானத்தை திட்டமிட்டு குறைத்து, அடிவயிற்றில் அடித்துள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
டி.சந்ரு