கொத்மலை பொலிஸ் பிரிவில் வீடொன்றிலிருந்து 15 வயது சிறுமியின் சடலம் மீட்பு.

0
179
கொத்மலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை, மேல் கடைவீதி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து, 15 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
 
சடலம் மீதான பிரேத பரிசோதனை, இன்று காலை நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
 
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் விக்நேஸ்வரன் விதுஷா (15 வயதும் 7 மாதங்களும்) என்பவராவார்.
 
இந்த சிறுமி தனது வீட்டில் தனி அறையிலிருந்து சடலமாக காணப்பட்டுள்ளார்.
 
இதையடுத்து, நேற்று திங்கட்கிழமை அதிகாலை 04 மணியளவில் சிறுமியின் பெற்றோர் 119க்கு அழைப்பை ஏற்படுத்தி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாகவும் தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சிறுமியின் சடலத்தை மீட்டதாகவும் கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
 
டி.சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here