கொரோனா தொற்றிலிருந்து விடுபடுவதற்கு மலையகத்தில் விசேட பூஜை

0
204

தீவிரமாகி வரும் கொரோனா தொற்றிலிருந்து விடுபடுவதற்காக இன்று நாடு முழுவதும் 5.46 மணியளவில் சர்வமத பிரார்த்தனைகள் இடம் பெற்றன.

இதனையொட்டி மலையக ஆலயங்களிலும் பள்ளி வாசல் மற்றும் பௌத்த வழிபாட்டு தலங்களிலும் கொரோனா பிடியிலிருந்து விடுபட இன்று விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றன.

இதன் போது விசேட யாக பூஜையும் இடம் பெற்றன.

பிரதான இந்து மத வழிபாடு தலவாக்கலை அருள்மிகு ஸ்ரீ கதிரேசன் தேவஸ்த்தானத்தில் தேவஸ்த்தான குருக்கள் லங்கா தேசமானி, முத்துசாமி ஐயர், பிரசாந்த் சர்மா, ஆலய தேசிகர் ம. ஜெயகாந்த் ஆகியர்வர்களின் பங்களிப்புடன் நடைபெற்றன.

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டு சுபீட்சமானதொரு வாழ்வு மலர உலக மக்களின் நன்மைக்காகவும் இலங்கை வாழ் மக்களின் நன்மைக்காகவும் சர்வமத பிராத்தனைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here