நாங்கள் நோர்வூட் பிரதேச சபையினூடாக நிறைய வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம் 22 பாதைகள் அடையாளம் காணப்பட்டு காபட் இட நடவடிக்கை எடுத்திருக்கிறோம். கடந்த காலங்களில் போடைஸ் பாதையில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானது. அப்போது நாங்கள் பாதையினை மூடினோம் அரசாங்கம் எங்களுடன் உள்ளது. என்ற நம்பிக்கையில் அவ்வாறு செய்தோம் அதனால் இன்று அந்த பாதையின் அபிவிருத்தி பணிகள் தற்போது இடம்பெற்று வருகிறது. அதே போன்று பொகவந்தலா வீதிக்கு 1250 மில்லியன் ஒதுக்கீடு செய்து அதனை தற்போது செய்து வருகிறோம். ராணிக்காடு வீதி 4.2 கிலோ மீற்றர் காபட் இடப்பட்டுள்ளது. 15 மில்லியன நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஒவ்வொரு தோட்டத்திற்கும் நோர்வூட் பிரதேச சபையூடாக அபிவிருத்திதிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவையாவும் ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வழிகாட்டல்களுக்கு அமைய தான் செய்யப்பட்டு வருகின்றன. இது மாத்திரமன்றி 34 மில்லியன் ரூபா வந்துள்ளது நவம்பர் மாதத்திற்கு முன் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்க ஒவ்வொரு தோட்டத்திற்கும் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் 20 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பணிகள் முன்னெடுக்க உள்ளோம். அது மாத்திரமின்றி டிரஸ்ட் ஊடாக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் கோட்டபாய ராஜபக்ச ஆட்சி காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக இந்த அபிவிருத்தி திட்டங்கள் சற்று தாமதமடைந்தாலும் கூட இப்போது 80 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதனால் நாடு வழமைக்கு திரும்பி வருகிறது.
ஆகவே எதிர்கால திட்டங்கள் மிகவும் மும்முறமாக இடம்பெறும் என நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் முழுமைப்படுத்தப்படாத 248 வீடுகள் அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுத்து கையளிக்கும் நிகழ்வு நேற்று (04) இடம்பெற்றது. அதில் போடைஸ் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நோர்வூட் பிரதேசசபைக்குட்பட்ட போடையஸ் பகுதியில் 50 வீடுகளும், பொகவந்தலா பொகவான பகுதியில் 90 வீடுகளும் லின்டட் பகுதியில் 93 வீடுகளும், புரட்டப் பகுதியில் 15 வீடுகளும் கையளிக்கப்பட்டுள்ளன.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…..
ஜனாதிபதி கோட்டபாய அவர்களின் பணிப்புரைக்மைய அதிமேதகு பிரதமர் மஹிந்த ராஜபக்அவர்களின் வழிகாட்டல்களுக்கமைய சூம் தொழிநுட்பத்தின் ஊடாக இந்திய வீடமைப்பு திட்டத்தினை கையளிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டல் இடம்பெற்றன. இந்த வழிகாட்டல்களுக்கமைய தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்புகள் ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் நெறிப்படுத்தலில் இந்த வீட்டுத்திட்டங்களை பயனாளிகளிடம் கையளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதற்கமைய இன்று இந்த வீட்டு திட்டங்கள் உங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
உங்களுக்கு தெரியும் கடந்த காலங்களில் அமர் ஆறுமுகன் தொண்டமான் இருக்கும் போது 2014 ம் ஆண்டு வடக்கு கிழக்குக்கு 50 ஆயிரம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட போது அப்போது இந்தியாவில் தமிழ் நாட்டில் தி.மு கா. ஆட்சியிலிருந்தது அந்த காலக்கட்டத்தில் எல்லா அமைச்சர்களையும் ஹட்டனில் கொண்டு வந்து இது தான் மலையகம் இது தான் மலைநாடு இவர்கள் தான் இந்திய வம்சாவழி மக்கள் என காட்டி 4000 வீடுகளை பெற்றுக்கொண்டார். அவ்வாறு பெற்றுக்கொண்ட போது 2015 அண்டு ஆட்சி மாற்றம் இடம்பெற்றது.
சாதாரணமாக ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்றால் அதற்கு நிறைய வழிமுறைகள் காணப்படுகின்றன. காணி தெரிவு செய்ய வேண்டும் என்.பி,ஆர்.ஓ. அறிக்கை பெற வேண்டும் காணி விடுவிக்க வேண்டும் இவ்வாறு பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க வேண்டும் அவ்வாறான ஒரு நிலையில் ஆட்சி மாற்றம் இடம் பெற்ற போது அவர்கள் இந்த வீடுகளை கட்டினார்கள்.
மிகவும் மகிழச்சி அனைவரும் ஒன்றாக இருக்கிறீர்கள் அவ்வாறான ஒரு சூழ் நிலையில் கடந்த காலங்களில் நாங்கள் கூட்டங்களை நடத்தும் போது அனைவரும் வருகை தந்து இந்த வீட்டுத்திட்டத்திற்கு தண்ணீர், மின்சாரம், பாதை வசதிகளை செய்து கொடுத்து வீடுகளை கையளிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள் அந்த வகையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் இடைக்காலத்தில் அமைச்சராக பதவியேற்ற போது இந்த வீட்டுத்திட்டங்களை முழுமையாக்கப்பட வேண்டும் என்பதில் கருத்தும் கண்ணுமாக செயப்பட்டார். ஆனால் துரதிஸ்ட்டவசமாக அவர் எம்மை விட்டு பிரிந்து சென்றார்.
இந்திய அரசாங்கத்தின் ஒரு நிபந்தனை தான் இந்திய அரசாங்கம் வீடுகளை கட்டிக்கொடுக்கும் உட்கட்டமைப்பு வசதிகளை இலங்கை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும் என்பது இவ்வாறான ஒரு நிலையில் பதவியேற்ற கௌரவ ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் முழுமையடையாத வீடுகளுக்காக 520 மில்லியன் உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளார். அவர் நினைத்திருந்தால் 10 லட்சம் படி 500 வீடுகளை கட்டிக்கொடுத்திருக்கலாம் ஆனால் 10 வீட்டுத்திட்டத்தினை ஆரம்பிக்க வேண்டும் அதற்கு முன் இந்தியா கட்டிகொடுத்த வீட்டுத்திட்டத்திற்கு வீதி, மின்சாரம் குடிநீர் ஆகியவற்றை பெற்றுக்கொடுத்து விட்டு அந்த வீட்டுத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளார். என அவர் மேலும் தெரிவித்தார்.