கொலம்பியாவின் ஆயுதமேந்திய புரட்சிப் படை வியாழக்கிழமை (21) நடத்திய இரண்டு தாக்குதல்களில் சுமார் 18 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர்.
கொலம்பியாவில் அதிக சனத்தொகை கொண்ட மூன்றாவது நகரமான காலியில், இராணுவ விமான பயிற்சி முகாமுக்கு அருகே வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் வெடித்தது. அதில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 71 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் இடம்பெற்று சில மணி நேரங்களுக்கு முன்பு, கோகோ இலை பயிர் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்ட தேசிய பொலிஸ் பிளாக் ஹாக் ஹெலிகொப்டர், ஆன்டியோகுவியா துறையில் உள்ள அமல்ஃபி நகராட்சியில் ட்ரோன் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 12 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு 450,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நீண்டகால உள்நாட்டு மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 2016 அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்த ஆயுதமேந்திய புரட்சிப் படை தான் காரணம் என கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ குற்றம்சாட்டியுள்ளார்.