கொழும்பின் பல பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம்

0
235

75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் ஒத்திகையை முன்னிட்டு காலி முகத்திடல் மற்றும் கொழும்பின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இந்த போக்குவரத்து திட்டம் அமுலில் உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதன்படி பல வீதிகளின் போக்குவரத்து நிறுத்தப்படும் என மேற்கு போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் விஜேசிங்க தெரிவித்தார்.

போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் கொழும்பிற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் வாகனங்கள் பயன்படுத்த வேண்டிய மாற்றுப் பாதைகள் தொடர்பிலும் பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் விஜேசிங்க தெளிவுபடுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here