கொழும்பில் வாகன விபத்துக்களை ஏற்படுத்தி பணம் பெற்ற நபர்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேண்டுமென்றே தனது முச்சக்கரவண்டியை மற்ற வாகனங்களுடன் மோத வைத்து கப்பம் பெற்றுவந்த சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரான சாரதி நுகேகொடை மற்றும் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிகளில் வாகனத்தை செலுத்தி வந்துள்ளமை விசாரரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் இரண்டு மாதங்களுக்குள் 15 சாரதிகளிடம் இருந்து 300,000 ரூபாவை விடவும் அதிக பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.